• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியல் இலாபத்துடன் செயற்படும் தரப்பினா் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் – ரஞ்சித்

இலங்கை

நாட்டில் பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் மேற்கொண்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் இலங்கை விஜயம் தொடர்பாக ரூவன்வெல்ல பகுதியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

பொருளாதாரம் சார்ந்த விடயங்களை அரசியல்மயப்படுத்தும் வகையில் ஒருசிலரால் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பாக அவதானமாக செயற்பட வேண்டும்.

இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் மற்றும் மறுசீரமைப்புக்களில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

பணவீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் அதேபோல் அரச வருமானத்தை அதிகரித்தல் அந்நிய செலவாவணியை அதிகரித்தல் போன்றவை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

சர்வதேச நாணயநிதியத்துடனான ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணயநிதியத்துடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும் என்பதுடன் வரிகுறைக்கப்படும் என இன்று பலர் கூறுகின்றனர்.

எனவே இது அரசியல் சார்ந்த விடயமல்ல இது பொருளாதாரம் சார்ந்த விடயமாகும் என்பதை சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

எனவே நாட்டின் கடந்த கால நிலை மற்றும் தற்போதைய நிலையறிந்து மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

எனவே அரசியல் இலாபம் கருதி பொறுப்பற்ற வாக்குறுதிகளை வழங்கும் தரப்பினர் தொடர்பாக மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply