• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலங்கரை விளக்கம்

சினிமா

கலங்கரை விளக்கம்’ என்ற இந்த கறுப்பு வெள்ளை திரைப்படம் 1965-ல் வெளிவந்து அமோக வெற்றி பெற்றிருக்கிறது. சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு. இயக்கம் கே. சங்கர். கதை மா. லட்சுமணன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்.

. இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடமா என்றால் ‘ஆம்’, ‘இல்லை’ என்று சொல்ல முடியவில்லை, கதாசிரியரும் இயக்குநரும் ரொம்பவும் சாமர்த்தியசாலிகள்!

1965-ல் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படங்களில் எங்க வீட்டுப் பிள்ளையும், ஆயிரத்தில் ஒருவனும் பிளாக் பஸ்டர்கள் ஆயின. என்றாலும் அதே ஆண்டில் பணம் படைத்தவன், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களோடு இந்தக் கலங்கரை விளக்கம் படத்திலும் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆர். படம் என்றாலும் அவரது ஹீரோயிஸத்துக்கு அதிக இடம் தராத படம். என்றாலும் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. தனக்கேற்ற வேடம் என்று பார்க்காமல் பாத்திரத்தை உள்வாங்கி அதற்கேற்ற நடிப்பை எம்.ஜி.ஆர். தந்திருக்கிறார். அவருடைய முத்திரை களும் ஆங்காங்கே படத்தில் உண்டு.

நகைச்சுவைக்கு நாகேஷ், வீரப்பன், மனோரமா. மகாபலிபுர டூரிஸ்ட் கைடுகளாக வரும் நாகேஷும், வீரப்பனும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். எம்.ஜி.ஆருடன் இந்தத் திரைப்படத்தில் சரோஜா தேவிக்கு அடுத்தபடியாக அதிக ‘நெருக்கமாக’ நடித்திருப்பது கோபாலகிருஷ்ணன்தான்!

பாடல்களும் இசையும் ஜீவனுள்ளவை. இப்போது கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கின்றன.

‘நான் காற்று வாங்கப்போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..’ பாடல் எளிய கவித்துவம் மிக்க வரிகளாக பாமர ரசிகனை பண்டித ரசிகனையும் ஒருசேர ஈர்த்தது. இந்தப் பாடலை எழுதியவர் அன்று நிஜமாகவே வாலிபராக இருந்த வாலி.

பாரதி தாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை சீர்காழி கோவிந்த ராஜனின் மணிக்குரலில் இன்று கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது.

' காற்று வங்கப் போனேன் ' , ‘என்னை மறந்ததேன் தென்றலே’, ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ ஆகிய பாடல்கள் மெட்டுக்காகவும் பாடல் வரிகளுக்காகவும் மறக்க முடியாதவை.

60 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது குறைகள் தெரிந்தாலும் படத்தின் ஆதாரமான தொனியில் இருக்கும் நேர்மையும் எளிமையும் இன்றும் கவர்கின்றன. சாகாவரம் பெற்ற பாடல்கள் படத்தின் சிறப்பு முத்திரை.

- தி இந்து

Leave a Reply