• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கழுகின் அசத்தலான மீன் வேட்டை! திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் காட்சி 

கழுகு ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடி கவ்விச் சென்ற நிலையில், குறித்த மீன் தன்னை காப்பாற்றிக்கொள்ள துடிதுடித்த காட்சியை இங்கு காணலாம்.

பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக அதிகமாக கழுகின் மீன் வேட்டை காட்சிகள் வெளியாகி வருகின்றது.

கூர்மையான பார்வையை கழுகு பார்வை என்று கூறுவது 100 சதவீதம் உண்மையே. இதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இக்காட்சி இருக்கின்றது.

அதிகமான மீன் வேட்டையை அவதானித்தாலும், புதிய புதிய காட்சியை மறுபடியும் பார்க்கும் போது சலிக்காமல் தான் உள்ளது.

தற்போதும் ராட்சத மீன் ஒன்றினை அசால்ட்டாக வந்த கழுகு ஒன்று வேட்டையாடியுள்ளது. குறித்த மீன் தப்பிக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் இருப்பதையும் இக்காட்சியில் காண முடிகின்றது.
 

Leave a Reply