• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவிற்கு விசிட்டர் விசாவில் சென்ற தமிழர்களுக்கு எச்சரிக்கை

கனடா

கனடாவிற்கு தற்காலிக விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்கள் அங்கு பணியாற்று முயற்சித்து வருகின்றனர்.

சட்டரீதியாக பணியாற்றுவதற்கு LMIA (Labour Market Impact Assessment) எனும் தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு ஆவணம் முக்கியமானதாகும்.

அதனை சட்டவிரோதமான பெற்றுக்கொள்ள பெருந்தொகை பணத்தை செலுத்தி வருகின்றனர்.

விசிட்டர் விசாவில் சென்ற பல தமிழர்கள், இந்த ஆவணத்தை பெற 25 ஆயிரம் டொலர்களை வரை செலுத்துகின்றனர்.

இந்நிலையில் LMIA ஆவணத்தை பெற பெருந்தொகை பணத்தை செலுத்திய பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LMIA ஆவணத்தை மிகவும் இலகுவாக பெற்றுத்தருவதாக பல முகவர்கள் செயற்படுகின்றனர். அவ்வாறான முகவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறான ஆவணங்களை பெற முயற்சிப்போர் போலியான முகவர்களை நம்பி ஏமாற வேண்டும் என பாதிக்கப்பட்ட தமிழர்கள் தெரிவித்துள்ளனர். 
 

Leave a Reply