• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வியாழன் கிரகத்தை விட பெரிய கிரகத்தை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள்

வியாழன் கிரகத்தை விட ஆறு மடங்கு பாரிய "Super Jupiter" எனும் கிரகத்தை நாசாவின் (NASA) ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

நாசாவின் சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் (James Webb) விண்வெளி தொலைநோக்கி இந்த மாபெரும் கிரகத்தின் சில படங்களை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், இந்த பிரமாண்ட கிரகம் பூமியில் இருந்து 12 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரகம் தனது நட்சத்திரத்தைச் ஒரு முறை சுற்றி வர சுமார் ஒரு நுற்றாண்டு தொடக்கம் இரண்டரை நுற்றாண்டுகள் வரை ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேபோல், இந்த கிரகத்திற்கும் அதன் நட்சத்திரத்திற்கும் இடையிலான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட சுமார் 15 மடங்கு அதிகம் என்று நம்பப்படுகிறது.

முழுக்க முழுக்க ஐதரசன் வாயுவினால் ஆன இந்த கிரகத்தின் வளிமண்டலம் பூமியில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும் என இந்த ஆராய்ச்சி குழுவை வழிநடத்தியவர் கூறியுள்ளார். 
 

Leave a Reply