• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் பாண் விலையை மோசடியாக அதிகரித்த நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நிலை

கனடா

கனடாவில் பாண் விலையை மோசடியான முறையில் அதிகரித்த நிறுவனங்கள்,  பெருந்தொகை பணத்தை நட்டஈட்டுத் தொகையை வழங்க இணங்கியுள்ளன.

மோசடியான முறையில் பாண் விலையை நிர்ணயம் செய்த நிறுவனங்கள் இவ்வாறு 500 மில்லியன் டொலர் செலுத்துவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.

லெப்லோவ் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஜார்ஜ் வெஸ்டர்ன் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இவ்வாறு 500 மில்லியன் டாலர்களை செலுத்துவதற்கு இணங்கியுள்ளன.

இந்த இரண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து பாண் விலை நிர்ணய சதி யில் ஈடபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நீதிமன்றில் குறித்த  நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கனடாவின் முன்னணி மளிகை பொருள் விற்பனை சங்கிலித் தொடர்களைக் கொண்ட வால்மார்ட், மெட்ரோ, ஜெயன்ட் டைகர், சோபெய்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கனடிய மக்களின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கனடாவில் பாண் கொள்வனவு செய்தவர்கள் அனைவருக்காகவும் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஜார்ஜ் வெஸ்டர்ன் நிறுவனம் 247.5 மில்லியன் டொலர்களையும் லெப்லோவ் நிறுவனம் 252.5 மில்லியன் டொலர்களையும் செலுத்துவதற்கு இணங்கியுள்ளன.

கனடிய சந்தையில் பாணின் விலை மோசடியான முறையில் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வழக்குத் தொடுனர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் மோசடி இடம் பெற்றுள்ளதனை உறுதி செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனங்கள் நட்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 14 ஆண்டுகளாக பொதியிடப்பட்ட பாண் விற்பனையில் செயற்கையான முறையில் விலை அதிகரிப்பினை மேற்கொண்டு வந்தமை தெரிய வந்துள்ளது. 
 

Leave a Reply