• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இப்பொழுதெல்லாம் எதிர் பாலினத்தவரிடம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஈர்ப்பு ஏற்பட்டால் 

சினிமா

இப்பொழுதெல்லாம் எதிர் பாலினத்தவரிடம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஈர்ப்பு ஏற்பட்டால் அதை கிரஸ் என்று சொல்லி விடுகிறோம். ஆனால் ஒரு 40 வருடங்களுக்கு முன்பு அப்படி அல்ல. அப்படி ஒரு உணர்வுக்கு பெயரும் கிடையாது அப்படி பெயர் வைத்தாலும் அது நாகரீகமாக இருக்காது. ஆனால் அந்த பெயரற்ற ஒரு உணர்வை மையப்படுத்தியே ஒரு காவியம் படைத்தார் என்றால் அவர்தான் இயக்குனர் இமயம் K. பாரதிராஜா. அதற்கு முதல் மரியாதை என்று பெயரும் சூட்டினார். வயது என்பது உடலுக்கு தானே மனதிற்கு ஏது.. அப்படித்தான் தொடங்குகிறது இந்த 20க்கும் 50க்கும் ஆன காதல். 50 வயதாகும் மலைச்சாமியிடம் 20 வயதாகும் குயிலி காதல் கொள்கிறாள். எதைக் கண்டு காதல் கொள்கிறாள். மலைச்சாமியிடம் கட்டுடல் மேனி இல்லை ஆனால் இளவட்ட கல்லை தூக்கும் வாலிபனாக வலம் வருகிறார். முறுக்கும் மீசை இல்லை ஆனால் தலையில் நரை உண்டு அதில் முத்து மணிகளை கோர்த்து அழகு பார்க்கிறாள் இந்த குயிலி. குயிலின் காதல் ஆற்றில் செல்லும் பரிசில் போல கரையையும் கடக்கலாம் வெள்ளத்திலும் முழுகலாம்  பரிசில் ஒட்டி பஞ்சம் பிழைக்க வந்தவள் தான் இந்த குயிலி. ஊர் பண்ணையாராக வரும் மலைச்சாமியின் பேச்சில் கவரப்பட்டு காதல் அகப்பட்டுக் கொள்கிறாள். மலைச்சாமி ஒரு திருமணமான நடுத்தர வயது ஆண். தனக்கு கிடைக்காத அன்பை குருவிகளிடமும் புல்லாங்குழல் இசையிலும் தேடுகிறார்.


குயிலின் அன்பை புரிந்து கொண்டு அவளிடம் சினேகம் கொள்கிறார். சினேகத்தின் வெளிப்பாடாய் மலைச்சாமியின் திருமண வாழ்க்கை ஊருக்காக போடப்படும் நாடகம் என்பதை புரிந்து கொள்கிறாள் குயிலி. அந்த சினேகிதம் காதலாக மாறுகிறது. ஊர் புறம் பேச ஆரம்பிக்கிறது. இந்த காதலுக்கு விடை என்ன... இதற்கு முற்றுப்புள்ளி வந்து சேர்கிறார் சத்யராஜ். மலைச்சாமியின் மனைவி பொன்னாத்தாவின் காதலன். பொன்னாத்தாவின் பெண்ணிற்கு இவனே தகப்பன். இவன் கரை சேர்ந்தால் மலைச்சாமியின் மானம் போய்விடும். எனவே நடு ஆற்றில் வைத்து கதையை முடிக்கிறாள் குயிலி.


சிறைவாசம் சென்ற குயிலியை சந்திக்கிறார் மலைச்சாமி தன் காதலை ஒப்புக்கொள்கிறார். எத்தனை வருடமானாலும் உனக்காக நான் காத்திருப்பேன் என வாக்கு கொடுக்கிறார். குயிலியும் திரும்புகிறாள் சிறைவாசம் முடிந்து தன் காதலனை பார்ப்பதற்காக .. அங்கே உயிரை கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் கிடக்கிறார் மலைச்சாமி அவரின் மேல் குயிலியின் கைகள் தொடுகிறது மலைச்சாமியின் உயிர் பிரிகிறது.  மலைச்சாமி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றி விட்டார். காவியம் இத்தோட நிறைவுக்கு வருகிறது. 


இது முதல் மரியாதை காதலுக்கு முதல் மரியாதை நடிகர் திலகத்திற்கு முதல் மரியாதை.. சொக ராகம் சோகம் தானே இசைஞானிக்கு முதல் மரியாதை.. இயக்குனர் இமயத்திற்கு முதல் மரியாதை..

சிகரம்ராஜா ரமணி

Leave a Reply