• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனக்கு தேவையான ஒருவரை ஜனாதிபதி நியமிக்க முடியாது – ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

இலங்கை

தனக்கு தேவையான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு, சபாநாயகர் இடமளிக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தொிவித்துள்ளாா்.

பொலிஸ் மா அதிபா் விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக தொடா்ந்தும் உரையாற்றிய அவா்,

”அரசமைப்புச் சபை என்பது நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி என்று பிரதமர் இங்கே உரையாற்றினார்.

ஆனால், ஜனாதிபதியோ அரசமைப்புச் சபை என்பது நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதி என்று கூறியிருந்தார்.

அரசமைப்புச் சபையின் தலைவராக சபாநாயகர் எடுத்த தீர்மானத்தை கேள்விக்கு உட்படுத்திதான், உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டது.

தனக்கு தேவையான ஒருவரை பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிக்கு, சபாநாயகர் இடமளிக்கக்கூடாது” என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply