• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நியூயார்க் விமான நிலையத்தில் தீ விபத்து - 9 பேர் காயம்

அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் டெர்மினல் 8-ல் உள்ள எஸ்கலேட்டரில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 900-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply