• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதியிடம் செந்தில் விடுத்த கோாிக்கை – தொழிலாளா்களுக்கு இடைக்காலக் கொடுப்பனவு?

இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்கும் வரை தற்காலிக தீர்வாக, இடைக்கால கொடுப்பனவாக மாதாந்தம் 5000 ரூபாவிற்கு அதிக தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்தாகவும் ஏனைய சமூகத்தினருக்கு 5000 கொடுப்பணவு வழங்கிய போதும் பெருந்தோட்ட மக்கள் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது 1700 ரூபா சம்பளம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பனவாக 5000 ரூபா வழங்க மாவட்டம் வாரியாக தொழிலாளர்களின் பட்டியல், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை, தற்காலிக தொழிலாளர்கள் எண்ணிக்கை என அனைத்து ஆவணங்களை செந்தில் தொண்டமான் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கமைய செந்தில் தொண்டமானின் கோரிக்கையை விரைவாக ஆய்வு செய்யுமாறு சம்பத்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

மேலும் 1700 சம்பளத்தை பெறுவதற்கு தற்போதுள்ள சட்ட சிக்கல்கள் குறித்து ஜனாதிபதியிடம் செந்தில் தொண்டமான் எடுத்துரைத்ததுடன், மாற்று வழிகள் குறித்தும் கலந்துரையாடி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply