• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துபாய் சிறையில் நடந்த கொடூரம் - Emirates விமான பணிப்பெண் ஒருவர் சந்தித்த துயரம் 

சினிமா

கணவரின் தொடர் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், துபாய் அதிகாரிகளால் எதிர்கொண்ட துயரம் குறித்து மனம் திறந்துள்ளார்.

முன்னாள் Emirates விமானப் பணிப்பெண்ணான இவர் துபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், கடவுச்சீட்டு முடக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது.

அயர்லாந்தின் ரோஸ்காமன் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதான Tori Towey தமது கணவருடன் துபாயில் வசித்து வந்துள்ளார். Emirates விமானப் பணிப்பெண்ணான இவர் கணவரால் தொடர் தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் கணவரின் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட அவர், கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் துபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் மது அருந்தியதாகவும் குறிப்பிட்டு துபாய் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர். அத்துடன், பயணத் தடையும் விதித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரக சட்டங்களின் படி தற்கொலை முடிவும் கொலைக்கு நிகரானது என்றே சட்டத்தரணி ஒருவர் Tori Towey-இடம் கூறியுள்ளார். இந்த நிலையில் Tori Towey மற்றும் அவரது தாயார் கரோலின் ஆகியோர் அயர்லாந்து அதிகாரிகளிடம் உதவ முன்வருமாறு கெஞ்சியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அயர்லாந்து அதிகாரிகள் முன்னெடுத்த நடவடிக்கையால், அவர் நாட்டுக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையிலேயே துபாய் சிறையில் தமக்கு ஏற்பட்ட கொடூரம் தொடர்பில் அவர் மனம் திறந்துள்ளார்.

கணவரின் தாக்குதலில் இருந்து தப்பிய தம்மை அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பாமல் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். பச்சை நிற உடை அணிவித்து, விரல் அடையாளங்களையும் பதிவு செய்துள்ளதாக கூறிய அவர்,

அங்குள்ள பொலிசார் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும், ஆடை இல்லாமல் சோதனை மேற்கொண்டதாகவும், பொலிசார் தாக்கியதில் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தமது நகைகளை அவர்கள் பறித்ததாகவும் Tori Towey தெரிவித்துள்ளார். 2023ல் Emirates விமான சேவை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் தென் ஆப்பிரிக்க நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆனால் அந்த நபரின் பொறாமை மற்றும் சந்தேக குணத்தால் தமது மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறியது என குறிப்பிட்டுள்ளார். தற்போது அயர்லாந்து அதிகாரிகளால் தாம் மீட்கப்பட்டு, நாடு திரும்பியதாகவும், ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என்றும் Tori Towey தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply