• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீட்டு விலைகள் குறித்து வெளியான மகிழ்ச்சி செய்தி

கனடா

கனடாவில் எதிர்வரும் மாதங்களில் வீடுகளின் விலைகள் குறைவடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வீட்டு அடகுக் கடன் தொகை வெகுவாக அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் அதிகளவான வீட்டு உரிமையாளர்கள் வீடுகளை விற்பனை செய்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு தசாப்த காலத்தில் பாதிவாகாத அளவிற்கு தற்பொழுது வீட்டு விற்பனை குறித்த பட்டியல்களில் பல வீடுகள் விற்பனைக்காக பட்டியலிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான நிரம்பல் அதிகரிக்கும் நிலையில் வீட்டு விலைகளில் வீழ்ச்சி ஏற்படக் கூடும் என வீட்டுமனை சந்தை நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

அடகுக் கடன் தொகை அதிகரிப்பினை சமாளிக்க முடியாத காரணத்தினால் வீடுகள் இவ்வாறு விற்பனை செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply