• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கர்ப்பிணி தாய்மார்களிடையே வேகமாக பரவும் நோய்

இலங்கை

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உதித்த புளுகஹபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயின்றி வாழ்வதற்கு நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்க்கரை உணவுகளை குறைத்து, அதிக காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ள உணவில் கவனம் செலுத்தி, ஒருவருக்கு ஏற்ற எடையை பராமரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், குடும்பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், கழுத்துப் பகுதியில் கருமை, முகப் பகுதியில் முடி வளர்வது போன்ற நிலைகள் காணப்பட்டால் நீரிழிவு நோய் பரிசோதனையை செய்வது அவசியம் எனவும் நீரிழிவு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் உதித்த புளுகஹபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply