• Welcome to TamilsGuide
செய்திகள் 1

LPL 2024 - வெற்றி வாகை சூடியது கண்டி பெல்கன்ஸ் அணி

இலங்கை

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) அணிக்கு எதிராக  நேற்றைய தினம் நடைபெற்ற நீக்கல் போட்டியில் கண்டி பெல்கன்ஸ்( Kandy Falcons)அணி 2 விக்கெட்களால் வெற்றியீட்டி இரண்டாவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி பெல்கன்ஸ் 18.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

குறித்த போட்டியில் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க 39 ஓட்டங்களையும் பெற்று கண்டி பெல்கன்ஸ்  அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.

இப்போட்டியின் நாயகனான கமிந்து மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதேவேளை இப் போட்டியில் தோல்வி அடைந்த கலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply