• Welcome to TamilsGuide
செய்திகள் 1

16 வயதினிலே படம் வெளி வருவதற்கு முன்பு வரை திரைப்பட உலகம் ஸ்டுடியோக்களில் தான் முடங்கி இருந்தன

சினிமா

16 வயதினிலே படம் வெளி வருவதற்கு முன்பு வரை திரைப்பட உலகம் ஸ்டுடியோக்களில் தான் முடங்கி இருந்தன. அதற்கு முன்பு சில காட்சிகள் மட்டும் காஷ்மீர் சிம்லா போன்ற இடங்களில் படம் பிடிக்கப்பட்டன. சிவாஜி கணேசனின் சிவந்தமண் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தது 
அவையெல்லாம் கூட சில காட்சிகள் தான். படம் முழுக்கவும் வெளிப்புற காட்சிகள் ஆக படம் பிடிக்கப்பட்டது முதன் முதலில் அன்னக்கிளி படம் தான். அதற்காக தேவராஜ் மோகன் இருவருக்கும் நன்றி சொல்லலாம் 
ஆனாலும் அன்னக்கிளி வண்ணப் படம் அல்ல. ஆகவே இயற்கை காட்சிகளை அதன் இயற்கை வண்ணத்தில் நாம் பார்க்க முடியவில்லை. பாரதிராஜா வந்தார். பசுமை பசுமையாகவே தெரிந்தது. 
ரோஜா அதன் ரோஸ் நிறத்திலேயே தெரிந்தது 
தமிழ் ரசிகனுக்கு புதிய ஒரு ரசனையை தந்தது 
அதுவரை வந்தப் படங்கள் எல்லாம் கொஞ்சம் நாடகத் தன்மையோடும் செயற்கையான கதைகளாகவும் இருந்தன. ரத்தமும் சதையும்மான கிராம வாழ்க்கையை அந்த மனிதர்களை அந்த மனுஷிகளை அச்சு அசலாய் படம் பிடித்து காட்டியது பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் தான். பாரதிராஜாவின் புத்திசாலித்தனம் முதல் படம் என்பதால் புதிய முகங்களை போடவில்லை .திரை உலகில் ஏற்கனவே பிரபலமாக இருந்த கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஸ்ரீதேவி என்று மக்களுக்கு தெரிந்த முகங்களை வைத்து முதல் படத்தை எடுத்தார். அவருடைய நல் வாய்ப்பாக இளையராஜா பாரதிராஜாவுக்கு முன்பே வந்து திரையுலகில் கால் ஊன்றி விட்டார் ஆகவே அவருடைய இசை பாரதிராஜாவுக்கு வலது கரமானது 
இளையராஜா மேற்கத்திய இசை அதிகம் கற்றுக் கொள்ளாத காலம் அது ஆகவே அச்சு அசலான நம்முடைய பாரம்பரிய இசைக்கருவிகளை பயன்படுத்தி படத்துக்கு மெருகூட்டி இருப்பார் 
படம் அதுவரை சொல்லப்பட்ட கதைகளை விட வித்தியாசமாக இருந்தது 
அதற்குப்பின் கிழக்கே போகும் ரயில் புதிய வார்ப்புகள் என்று பாரதிராஜாவின் திரை உலக பயணம் மிக நெடியது. 
மணிப்பிரவாள நடையில்பேசி வந்த கதாபாத்திரங்கள் நல்ல தமிழ் பேச ஆரம்பித்தது கலைஞரின் பராசக்தி படத்தில் இருந்ததுதான்.. ஆனாலும் அவை கூட இலக்கியத் தமிழோடு இருந்த வசனங்கள் தான்.. முதன்முதலில் வசனத்தை மிக இயல்பாக திரை மொழியாக பயன்படுத்தியவர் இயக்குனர் ஸ்ரீதர்.. அவருடைய காலத்திலும் வசனம் எளிய தமிழ் இருந்தாலும் 
பேச்சுத் தமிழில் இல்லை.. சற்று உரைநடை தமிழில் இருந்தது 
பாரதிராஜா மண்வாசனையோடு மக்கள் மொழியில் திரையில் பேசப்பட்டது.. இது தமிழனுக்கு புதிய ஒரு ரசனையை கொடுத்தது 
வேதம் புதிது கருத்தம்மா போன்ற படங்கள் சமூகத்திற்கான முக்கிய செய்திகளை கூறியதோடு

வாழ்வியல் எதார்த்தத்தை பிரதிபலித்த  கதைகள் ஆகும் 
ஏறக்குறைய அவருக்கு முன்பு 50 ஆண்டுகள் இருந்த காதலுக்கான இலக்கணத்தை மாற்றி நடுவயது கடந்து கடந்த ஒருவர் இளம்பெண்ணை காதலிக்கலாம் 
என்ற புதிய கோணத்தை கதையாக சொன்னார். 
அந்தக் கதையையும் மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி முதல் மரியாதை தந்தது பாரதிராஜாவின் சிறப்பு 
பாரதிராஜாவின் இயக்கத்தை பார்த்த பிறகு தான் பாலச்சந்தர் அசந்து போய் "இயக்குனர் இமயம்"" என்று பாரதிராஜாவுக்கு பட்டம் கொடுத்தார். 
இது இது பாலச்சந்தரின் மாணவர்களாகிய கமலஹாசனுக்கு மற்றவர்களுக்கு சற்று மன வருத்தத்தை தந்தது. 
ஆகவே இமயத்தை விட சிகரம் கூடுதலாக இருக்கும் என்ற கருத்தில் *இயக்குனர் சிகரம்* என்று அவர்கள் பாலச்சந்தரை அழைக்க ஆரம்பித்தனர் அது நின்று நிலைத்து விட்டது 
எப்போதும் பாரதிராஜா படங்களை பார்த்தால் அந்த இயற்கையும் செழிப்பும் வனப்பும் பசுமையும் எப்படியும் நம் கிராமங்கள் இருந்துள்ளனவா என்று நம்மை வியக்க வைக்கும் 
அதற்கு முக்கிய காரணமாக இருந்தது பாரதிராஜாவுக்கு வலது கரமாக இருந்த ஒளிப்பதிவாளர்  கண்ணன் என்றால் மிகை இல்லை 
திரை உலகை பாரதி ராஜாவுக்கு முன் பாரதிராஜாவுக்கு பின் என்று பிரித்து தான் பார்க்க முடியும்

 

இன்று பாரதிராஜா பிறந்த நாள்
 

Leave a Reply