• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து

இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த ஜீப் , ஜாவத்தை வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்

நாடாளுமன்ற உறுப்பினரின் ஜீப்பும் ,காரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் காயமடைந்தவர்களில் காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாகவும், மூவரும் நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply