• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பு

இலங்கை

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக  ஆமைகள் மற்றும் டொல்பின்கள் போன்ற பாலூட்டி  விலங்குகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மேற்கு கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் உடல்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால்  மீன்பிடித் துறையும்,  சுற்றுலாத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்குப் பிராந்திய கால்நடை வைத்தியர் சுஹதா ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply