• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டை விட்டுத் தப்பியோடிய பாதாள உலகக் குழுவினர் குறித்த முக்கியத் தகவல்

இலங்கை

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு உறுப்பினர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாகத்  தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெறும் 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 43 பாதாள உலகக் குழுகள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், அந்த குழுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply