• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது

இலங்கை

” தற்போது இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது எனவும்  இதற்கு தாம் உடன்பட மாட்டோம் எனவும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக்  கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”நல்லாட்சியின்போது நான் அமைச்சராக இருந்தேன், தனி வீடுகள் அமைக்கப்பட்டே காணி உரித்துடன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால், இவர்கள் லயன்களைக் கிராமங்களாக்கப் பார்க்கின்றனர். இதற்கு உடன்பட முடியாது என ஜனாதிபதியிடம் தெளிவாகக் குறிப்பிட்டோம்.

எமது மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட்டு, வீடுகள் நிர்மாணிக்கப்பட்டே கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். காணி உரிமைக்கான எமது குரல் தொடர்ந்து ஒலிக்கும் ” இவ்வாறு பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply