• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் காற்று சீராக்கி பயன்பாடு அதிகரிப்பு

கனடா

கனடாவில் காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தற்பொழுது சுமார் 68 வீதமான அளவில் காற்று சீராக்கிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காற்று சீராக்கிகளை கொள்வனவு செய்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இரவில் உறக்கம் கொள்ள முடியாத காரணத்தினால் பலரும் இவ்வாறு காற்று சீராக்கிகளைகளை வீடுகளில் பொருத்திக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அல்பர்ட்டா போன்ற பகுதிகளில் அதிக அளவில் இவ்வாறு காற்று சீராக்கிகள் தற்பொழுது பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய புள்ளி விபர தகவல்களின் அடிப்படையில் கல்கரியில் சுமார் 32 வீதமான வீடுகளில் காற்று சீராக்கிகள் காணப்படுவதாகவும் இது கடந்த பத்து ஆண்டுகளில் 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறு காற்று சீராக்கிகளின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காட்டுத்தீ போன்ற காரணிகளினால் இவ்வாறு காற்று சீராக்கியின் பயன்பாடு அதிகரித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
 

Leave a Reply