• Welcome to TamilsGuide
செய்திகள் 1

7500 பாடல்கள் - 7 தேசிய விருதுகள் - அரை நூற்றாண்டை கடந்தும் வெற்றியுடன் தொடரும் கவிப்பேரரசு வைரமுத்து

சினிமா

நாவலாசிரியராய், உலகத் தமிழ் மேடைகளில் உலாவரும் வீரியமிக்க சொற்பொழிவாளராய், பத்மஸ்ரீயாய், பத்மபூஷணாய், ஆறு ஜனாதிபதிகளிடம் ஏழுமுறை விருதுபெற்றவராய் இதற்கு முன் ஒரு பாடலாசிரியர் இவரைப் போல் சாதித்ததில்லை என்னும் புகழுகளுக்கு உரியவர் கவிப்பேரரசு வைரமுத்து. 

1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலரின் மனைவிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மனைவியை அனுமதித்துவிட்டு வரும்பொழுது திடீரென்று அலைபேசியில் அழைப்பு. எடுத்தால் மறுபுறம், இளையராஜாவும் பாரதிராஜாவும் உங்களுக்காக மெட்டுடன் காத்திருக்கிறார்கள், விரைவாக அட்லாண்டா ஹோட்டலிலுள்ள 114ஆம் அறைக்குச் செல்லுங்கள் என்ற செய்தி.

அட்லாண்டா ஹோட்டலுக்கு செல்கிறார் அந்த அலுவலர். இசைஞானி இசைக்கிறார், அந்த அரசு அலுவலர் கூர்ந்து கவனிக்கிறார். பாரதிராஜா அப்போது, ”கவிஞர் வேற புதுசு நீ வேற மெட்டப்போட்டு மிரட்டியிருக்க, ரெண்டு நாள் டைம் கொடுப்போம்” என்று எழுகிறார். அப்பொழுது யாரும் எதிர்பாராத வகையில் அந்த அலுவலர், "இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்..." என்று பல்லவியை கூறுகிறார். அச்சமயத்தில் அந்த அலுவலருக்குக் குழந்தை மட்டும் பிறக்கவில்லை, இந்த தமிழ்ச் சமூகத்தில் பல சாதனைகளைப் படைக்கக் காத்திருந்த கவிஞரும் பிறந்தார். ஆம், அந்த குழந்தை தான் மதன் கார்க்கி, அந்த அலுவலர் வேறு யாராக இருக்க முடியும் வைரமுத்து தான்.

அன்று தொடங்கி திரைப்பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் வைரமுத்துவின் இலக்கியப் பயணம் அரை நூற்றாண்டைத் கடந்திருக்கிறது.

கவிஞரின் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது. இவர் பிறந்தது இன்றைய வைகை ஆற்றுப்படுகையில் மூழ்கிப்போன 16 ஊர்களில் ஒன்றான மெட்டூர் என்ற கிராமம். அவரை வளர்த்ததோ இன்றைய தேனி மாவட்டத்திலுள்ள வடுகபட்டி கிராமத்தின் கடும் வறுமையே அவரை வளர்த்தது. பின்னாட்களில் தனது வடுகபட்டி வாழ்க்கையை நினைவு கூறும்போது, "வறுமையே எங்கள் ஆசான்" என்று குறிப்பிடுகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் வறுமையே ஒருவனுக்குச் செல்வத்தை, வாழ்க்கையை, நேரத்தை, மனிதர்களை, ‌எதிர்காலத்தை, லட்சியங்களை கற்றுக் கொடுப்பதாகக் கூறுகிறார் இந்த ஆச்சரியக் கவிஞர்

கவிதைகள் மட்டுமின்றி நாவல், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிப் பார்த்திருக்கிறார் வைரமுத்து. மொத்தம் 37 நூல்கள். வடிவம் எதுவென்றாலும் கவித்துவம் கொப்பளிக்கும் ஓர் நடையையே அவர் தனது முத்திரையாகக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மொழியின் மீது அபார பிரியம் கொண்ட கவிஞர்

Muthammal Rammohan

Leave a Reply