• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்  விஜயம்

இலங்கை

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, வைத்தியசாலையில் உள்ள விடுதிகள், சத்திரசிகிச்சை பிரிவுகள் மற்றும்  வைத்தியசாலையின் அரும்பொருட்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

அத்துடன் குருதி மாற்று சிகிச்சைக்கான உபகரணம் ஒன்றையும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு  அமைச்சர் வழங்கி வைத்தார்.

Leave a Reply