• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்..உலகம் சுற்றும் வாலிபன்..

சினிமா

இயக்குனர்: எம்ஜிஆர் 
எம்ஜிஆரை நடிகராக தெரியும்..
அரசியல்வாதியாக தெரியும்..
இயக்குனராக ?
அவர் தனது திரை வாழ்க்கையில் மூன்று படங்களை இயக்கி உள்ளார்..
நாடோடி மன்னன்..
உலகம் சுற்றும் வாலிபன்..
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்..
மேற்கண்ட மூன்று படங்களில் அவரது திறமைகள் அதிகமாக வெளிப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன்.. எந்தவிதமான அரசியல் விஷயங்களும் இல்லாத இந்த படம் எம்ஜிஆரின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது..
அண்ணன் எம்ஜிஆரை காணவில்லை..

தம்பி எம்ஜிஆருக்கு (சிஐடி) விஷயம் புரிகிறது.. அண்ணன் எம்ஜிஆர் கண்டுபிடித்த ஆராய்ச்சி குறிப்பை பின் தொடர்கிறார்.. அண்ணன் எம்ஜிஆர் தானாகவே கிடைப்பார் என தம்பி எம்ஜிஆரின் கணக்கு சரியாகவே இருக்கிறது..
அண்ணன் எம்ஜிஆரை தேடும் விஷயத்தை தம்பி எம்ஜிஆர் ... அநாயாசமாக பாடி கொண்டே செய்து முடிப்பார்.. டெக்னாலஜி இல்லாத அந்த காலத்தில் ரசிகர்கள் படத்தை ரசித்து பார்க்க வேண்டும் என்பதற்காக கேமிரா கோணங்கள் மற்றும் சுறுசுறுப்பு மூலம் இன்றைக்கு படம் பார்த்தாலும் பிரமிப்பை ஏற்படுத்தும் ..
ஹீரோ கையசைத்தாலே இருபது பேர் இரண்டு கிலோ மீட்டர் தூரப்போய் விழுகிறார்கள் இப்போது... ஆனால் மதம் கொண்ட யானை நம்பியாரிடம் சினம் இல்லா சிங்கமாக சிரித்து கொண்டே புத்தர் கோயிலில் போடும் சண்டையின் நளினம்... எவ்வளவு பெரிய துன்பத்தையும் தாங்கும் திறனை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தும்...
அண்ணன் எம்ஜிஆரை காணவில்லை.. ஆராய்ச்சி குறிப்புகளுக்கு ஆபத்து.. உலக மக்களுக்கு துன்பம் வரக்கூடும்... அதையெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்... ரசிகர்கள் எந்த கவலையும் படவேண்டாம் கூலாக பாட்டையும் ஆட்டத்தையும் ரசித்து கொண்டே கூட இருங்கள் அதுபோதும் என்கிற மனோநிலை...ஆக மிகச்சிறந்த இயக்கம்..
மிகச்சிறந்த இயக்குனர்..

Leave a Reply