TamilsGuide

மலையகப் பெண்களுக்கு விடிவு காலம் எப்போது?

”தேயிலை உற்பத்திக்காகப் பாடுபடும் மலையகப் பெண்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்?” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன்.

ஆனால், அந்த தேயிலையை உற்பத்தி செய்ய ஆண்டாண்டு காலமாக  பாடுபடும் மலையகப் பெண்களுக்கு நல்ல செய்தி எப்போது வரப் போகின்றது?

இலங்கையில் பெருந்தோட்ட தொழிற்துறையை தவிர, பெயருக்கு கூட வேறு ஏற்றுமதி தொழிற்துறைகள் இருக்கவில்லை. 1948ம் முதல் நமது மக்களின் உழைப்பை கொண்டு பெற்ற அந்நிய செலாவணி இருப்பை வைத்து தான், அரச தலைவர்கள் சுகபோக வாழ்கை நடத்தினர்.

இனியாவது மலையக பிற்போக்கு அரசியல்வாதிகள் வாய் சவடால்களை நிறுத்தி விட்டு, இலங்கை சரித்திரத்தை, பொருளாதார வரலாறுகளை கற்றறிந்து, எமது மக்களின் உரிமைகளுக்கு குரல் எழுப்ப வேண்டும். இதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி எவருடனும் கரம் கோர்த்து  செயற்படத் தயார்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment