TamilsGuide

அழைப்பு விடுத்த ஜனாதிபதி - மறுப்புத் தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்பினை ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகவுள்ள நிலையில் அரசியல் ரீதியிலான முன்நகர்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஜக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

தேசத்தைப் பாதுகாப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்கினால், அவர்களின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது  குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதியின் இந்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் நிராகரித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் கட்சியின் பிரச்சார முகாமையாளர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் இன்று இதனை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்  இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment