• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுத்தையை குளிப்பாட்டும் பெண்

குளியல் தொட்டியில் வைத்து சிறுத்தையை இளம்பெண் குளிப்பாட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்குகிறது.

தென் அமெரிக்க பகுதிகளில் காணப்படும் சிறுத்தை இனங்களை சேர்ந்தது ஜாகுவார் சிறுத்தை. அந்த பெண் உயிரியல் பூங்கா பராமரிப்பாளரா அல்லது சிறுத்தையை குட்டியில் இருந்து தத்தெடுத்து வளர்ப்பவரா என்று தெரியவில்லை.

பூனைக்குட்டியை குளிப்பாட்டுவதுபோல ஒரு கையால் குழாயில் தண்ணீரை பீய்ச்சி அடித்து மறுகையால் சிறுத்தைக்கு உடம்பை தேய்த்து விட்டு குளிப்பாட்டுகிறார். சிறுத்தையும்

சீறாமல் குளியலை ரசிக்கிறது.

இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 94 லட்சம் பேரின் பார்வையைத் தாண்டி ஒருகோடி பார்வையாளர்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வலைத்தளவாசிகள் பெண்ணின் செயலை பாராட்டியும், விமர்சித்தும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள்.
 

Leave a Reply