• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பினருடன் தமிழ் மக்கள் பொதுச் சபை விசேட கலந்துரையாடல்

இலங்கை

தமிழ் மக்கள் பொதுச் சபையின்” பிரதிநிதிகள் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம் பெற்றது.

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகவும் வேலை தேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, தமிழ் மக்கள் பொதுச்சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 100க்கும் குறையாத மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருஐந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply