• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்

இலங்கை

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் குற்றம் சுமத்தியுள்ளாா்.

ஸ்ரீ மகாபோதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னா் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

நாட்டில் தேர்தலை பிற்போடுவதற்கு வரலாற்றில் எந்தவொரு கட்டத்திலும் இவ்வாறான சூழ்ச்சிகள் இடம்பெற்றதில்லை.

தேர்தலை பிற்போடுவதற்கு தற்போதைய ஜனாதிபதி பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

தேர்தலை நடத்துவதற்கு தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 3 தினங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெறுகின்றது. மக்கள் ஆணையில்லாத ஒரு அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது.

தேர்தலை நடத்தமுடியாது என எந்த நீதிமன்றத்தினாலும் தீர்ப்பு வழங்கப்படமாட்டாது. அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருகின்றது” என நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் மேலும் குறிப்பிட்டாா்.
 

Leave a Reply