• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை

மேல் மாகாணத்தில் நாளை முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டியில் பயணிப்பவருக்கு முதல் கிலோமீட்டருக்கு அதிகபட்சமாக 100 ரூபா கட்டணம்அறவிடப்படவுள்ளதுடன் இரண்டாவது கிலோமீட்டருக்கு 90 ரூபா அறவிடப்படவுள்ளது.

இதேவேளை பொதுப்போக்குவரத்து சேவை மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் பராமரித்தல் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரிங்களின் பிரகாரம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று முதல் அமுலாகும் வகையில் குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply