TamilsGuide

100 நாட்களில் அரசன் வருகிறார் - கங்குவா கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இதனை இன்னும் தூண்டிவிடும் வகையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இன்னும் 100 நாட்கள் தான் இருக்கிறது பட ரிலீஸுக்கு என்ற கவுண்டவுனை ஆரம்பித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வ்லைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தின் டிரைலர் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment