TamilsGuide

மன்னார்  மடுவில் விபத்து  ஒருவர் உயிரிழப்பு

மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள  இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற   விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியளார் தெரிவித்தார்.

குறித்த விபத்தில்  உயிரிழந்தவர் -மன்னார் பெரியகமம்  பிரதேசத்தில் வசித்து வரும்  இளம் குடும்பஸ்த்தர் என அமையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்  முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர்  பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment