TamilsGuide

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டும்-வட மாகாண ஆளுநர்

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய, தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் துறைசார் ஒத்துழைப்புக்கள் பகிர்ந்துக் கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வருவதற்கு காரணமாகிய மதிநுட்பத்தினை வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்துமாறு ஆளுநர் கோரியுள்ளார்.

வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களை செயற்படுத்துவதற்கு தமது அமைப்பு தயாராக உள்ளதென பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

இதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து துறைசார் அனுபவமிக்க தொண்டர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment