TamilsGuide

கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் நாள் வசூல்.. 

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கல்கி 2898 AD. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்காக இசையமைத்திருந்தார். இவருடைய பாடல்கள் பெரிதளவில் ஒர்கவுட் ஆகவில்லை என்றாலும் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது.

இந்த நிலையில், கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ. 5.8 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகளவில் கல்கி  2898 AD திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங். முதல் வாரத்தின் இறுதிக்குள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனையை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a comment

Comment