TamilsGuide

IMF தொடர்பான ஜனாதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது

”சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் இலங்கையில் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றமை  ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்” என  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த காலங்களில் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை  நாடியிருந்த போதிலும்  தமது தலைமையில்  17 ஆவது தடவை  சர்வதேச நாணய நிதியத்துடனான      வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதாக  ஜனாதிபதி கூறுகின்றமை  தவறான கருத்தாகும் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கடந்த 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தவறியமையே தோல்வி ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  17 ஆவது தடவை சர்வதேச நாணய நிதியத்தை நாடியபோது அனைத்து நிபந்தனைகளும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதனையே வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாகவும் சுரேஷ பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தகப்பட்டதன் ஊடாக வரி மற்றும் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில் வங்குரோத்துநிலையில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதவிடயமாகும் எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் 60 வீதத்திற்கு மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,  நாட்டின் பொருளாதார  நிலை வரி  மற்றம் விலையேற்றம் காரணமாக வறுமைக்கோட்டில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Comment