TamilsGuide

டயானா கமகேவுக்கு எதிரான மனு- ஓகஸ்ட் விசாரணை

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினரான ரெஹான் ஜயவிக்ரமவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. டயானா கமகே கடந்த காலத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், நீதிமன்றத்தை அவமதிக்கும் படி அமைந்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனை தொடர்ந்தே டயானா கமகேவுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரான டயானா கமகேவிற்கு, நாடாளுமன்றத்தில் அமரக்கூடிய சட்டத் தகைமை எதுவும் கிடையாது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை பதவி பறிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஊடகவியலாளர் டயானா கமகே இறுதியாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தனது அரசியல் பயணம் தொடரும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் அண்மைய காலமாக டயானா கமகே எந்தவொரு ஊடக சந்திப்பினையும் ஏற்பாடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment