TamilsGuide

உயிருக்கு போராடிய உரிமையாளர்.. உடனே களத்தில் இறங்கிய செல்லப்பிராணி..

ஜார்ஜியாவில் தனது உரிமையாளர் ஆண்ட்ரூ குசைக் மாரடைப்பால் துடிப்பதை உணர்ந்து, இரண்டு கைகளையும் இழந்த அவரது வளர்ப்பு நாய் சாம்ப் துரிதமாக செயல்பட்டு உயிரைக்காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்ஜியாவை சேர்ந்த ஆண்ட்ரூ குசிக் (61) சமீபத்தில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

2 வயதான அவரது வளர்ப்பு நாயின் இரண்டு முன்னங்கால்கள் இல்லாமல் பிறந்துள்ளது. சாம்ப் தனது பின்னங்கால்களை கொண்டே செயல்பட்டு வந்துள்ளது.

ஒரு நாள் ஆண்ட்ரூவின் மடியில் சாம்ப் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலியால் அவர் துடித்துள்ளார். அவரது வளர்ப்பு நாய் சாம்ப், அவர் வலியால் அவதிப்படுவதை உணர்ந்துள்ளது.

இதனை அவரது மனைவிக்கு உணர்த்த சிணுங்கலை வெளிப்படுத்தி உள்ளது. சாம்ப்பின் நடத்தை மற்றும் சிணுங்கலை கேட்ட அவரது மனைவி, நிலையை உணர்ந்து ஆம்புலன்சை வரவழைத்து ஆண்ட்ரூவை தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து சாம்ப் என் உயிரைக் காப்பாற்றி உள்ளது. நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்படி, அமெரிக்காவில் ஒருவருக்கு ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் மாரடைப்பு வருகிறது. மாரடைப்பு உட்பட, அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் இதய நோயால் சுமார் 1,905 இறப்புகள் ஏற்படுகிறது.

நாய்கள் அவற்றின் உணர்வுகளால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை கண்டறியும். அவற்றின் உணர்ச்சிகளால் நோய்கள் மற்றும் உடலியல் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.

Leave a comment

Comment