TamilsGuide

கிளிநொச்சி. புன்னை நீராவிக் கிராமத்தில் பதற்றம்

கிளிநொச்சி, புன்னை நீராவி கிராமத்தில் இராணுவ முகாம் காணி அளவீட்டுக்கு பொது மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அளவீடுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள புன்னைநீராவி கிராமத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியினை அளவீடு செய்வதற்காக இன்று நில அளவைத் திணைக்களத்தினர் சென்றுள்ளனர்.

இதன்போது காணி உரிமையாளர்களும் பொது மக்களும் இணைந்து நில அளவீட்டுப் பணிகளுக்கு எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனையடுத்து குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment