TamilsGuide

மக்களின் பாரம்பரிய உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டத்திற்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், ஒரு சிலர் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அம்பாறையில் தெரிவித்துள்ளார்.

இன்று அம்பாறை வீரசிங்க விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் தெரிவித்தார்.

இவ்வாறான அதிகாரிகள் குறித்த தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் கேட்ட ஜனாதிபதி, அதே தகவல்களை தனக்கும் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.

மக்களின் பாரம்பரியத்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கட்சி, எதிர்ப்புகள் இன்றி எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியுள்ள 20,000 பேரில் 1,654 பேருக்கு அடையாளமாக காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் இலவச நிலப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment