TamilsGuide

இந்தியன் 2 மேடையில் விவேக் இருந்திருக்க வேண்டும் - கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில், இந்தியன் 2 படக்குழு கலந்து கொண்டது. அதில் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன்,

"இந்தியன் 2" 2-ம் பாகத்தில் நடிப்பது பெருமை. 2-ம் பாகம் எடுப்பதற்கான கருவை இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.

ஊழல் அதிகமானதுதான் இந்தியன் தாத்தா வருவதற்கு பெரிய அர்த்தமே இருக்கிறது.

விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு இவர்கள் எல்லாம் இந்த வெற்றி விழாவில் பங்கேற்றிருக்க வேண்டியவர்கள். காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1, இந்தியன் 2 ஒரு உதாரணம்.

நாங்கள் திரும்பி பார்ப்பதற்குள் சங்கர் என்ற இளைஞர் இளைஞராகவே இருக்கிறார். நான் தாத்தாவாகி போனதால் வித்தியாசம் தெரியவில்லை.

இந்த மாதிரி மேடைகளில் வழக்கமாக 2 பேர் சண்டை போட்டுக்கொள்வார்கள். மாற்றுக்கருத்து இருக்கும். சங்கரும், கமலும் இணைந்து இதே போல் படம் எடுத்து இருக்கிறோம் அதுதான் இந்தியன் 3. இந்த மேடையில் இதை பேசக்கூடாது.

"இந்தியன் 2" படத்தை 6 வருடம் எடுத்ததற்கு நாங்களோ, தொழில்நுட்பமோ, தொழில்நுட்ப கலைஞர்களோ, நட்சத்திரங்களோ காரணமல்ல.

இயற்கை, கொரோனா வைரஸ், விபத்துக்கள் என பல விஷயங்கள் எங்களுக்கு இடையூறாக வந்தது.

அதில் இருந்து எல்லாம் எங்களை மீட்டு தோளில் சுமந்துவந்த லைகா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் என்றென்றும் இந்தியன் 2, இந்தியன் 3 கடமைப்பட்டது.

அதன் வெற்றியை அனுபவிக்கும் முதல் ஆட்கள் அவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் சங்கர் அவர்களுக்கும் எனக்கும் ஆசையாக இருக்கிறது. அதையடுத்து ஒரு ரசிகனாக ஏற்றெடுத்த உதயநிதி அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தையும், நடிகனையும், டைரக்டரையும் பெரிதாக ரசிக்கிறார் என்பது தான் உண்மை.

இங்கு இருக்கும் நண்பர்கள் எல்லோரும் இந்த படத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்தது போல் தெரியவில்லை. சந்தோஷமாக நடித்தார்கள். அதுபோல் வாய்ப்பது மிகவும் கடினம்.

இந்த படம் பல சாதனைகளை படைக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பதனால் அடுத்த விழாவில் விட்டதை பிடித்துக்கொள்ளலாம்.

இனி நீங்கள் கொடுக்கப்போகும் பாராட்டு, விமர்சனங்கள் அனைத்துக்கும் நன்றி என்று கூறினார்.
 

Leave a comment

Comment