TamilsGuide

சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமனம்

இராஜாங்க அமைச்சா் சதாசிவம் வியாழேந்திரன் மேலதிகமாக வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், இன்று காலை அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளாா்.

குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வு, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே சதாசிவம் வியாழேந்திரன் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்துவரும் நிலையிலேயே, மேலதிகமாக  மற்றுமொரு  இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment