TamilsGuide

இலங்கையர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்

இலங்கையர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட மதுபான தயாரிப்பு ஒன்றுக்கு அவுஸ்திரேலியாவில்(Australia) விருது கிடைத்துள்ளது.

இலங்கையில் உள்ள Two Rupees நிறுவனத்தின் இணை நிறுவனர் டேனி பெரேராவே இந்த விருதை வென்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற Australian Distilled Spirits விருதுகளில், அவர் தயாரித்த ஜின் தயாரிப்பு புதிய உலக சமகால ஜின் பிரிவின் கீழ் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்த மதுபான தயாரிப்பில் இலங்கை மசாலாப் பொருட்களும் இந்திய மசாலாப் பொருட்களும் சேர்க்கப்பட்டிருப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

டேனி பெரேரா பற்றி தெரியவருகையில், டேனி பெரேரா 2000 ஆம் ஆண்டில் நுண்ணுயிரியல் படிப்பதற்காக விக்டோரியா பல்கலைக்கழகத்திற்கு சென்றதுடன், மேலும் தனது படிப்பின் போது மதுக்கடை மற்றும் சமையல்காரராக பணியாற்றி வருகின்றார்.

பியர் தயாரிக்கும் ஆசையின் அடிப்படையில் சிறுவயது முதல் நண்பரான அமில மெண்டிஸுடன் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு Two Rupees என்ற பியர் தயாரிப்பு அவுஸ்திரேலியா சந்தையில் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டு இலங்கையர்களும் சராசரியாக மாதமொன்றுக்கு சுமார் 1200 லீற்றர் ஜின் உற்பத்தி செய்வதாகவும், மெல்பேர்னில் உள்ள பல பிரபல உணவகங்களில் இவை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment