TamilsGuide

ரத்த காயங்களுடன் வீடியோ வெளியிட்ட பிரியங்கா சோப்ரா - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் தடம் பதிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2018- ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோன்சை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் மால்தி மேரி என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். ஹாலிவுட்டில் பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்த காயங்களுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட வீடியோவை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹாலிவுட் திரைப்படமான தி பிளப் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்படும் போது இந்த காயங்கள் ஏற்பட்டதாக அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.
 

Leave a comment

Comment