TamilsGuide

குருந்தூர்மலை பகுதியில் விஷேட பாதுகாப்புடன் பாதயாத்திரை

முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் விஷேட பாதுகாப்புடன் பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்று பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு, குருந்தூர்மலை நோக்கி பாதயாத்திரை சென்ற தேரர்கள் குழு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பும் பலம் முல்லைத்தீவு, குருந்தூர்மலை பகுதியில் நீதிமன்றத்தின் அனுமதியை மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்த விகாரைக்கு பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் குழுவினர் இன்று பொலிஸார், விஷேட அதிரடிபடையினரின் பாதுகாப்புடன் பாதயாத்திரை ஒன்றினை மேற்கொண்டனர்.

பொசோன் பௌர்னமி தினத்தை முன்னிட்டு கடந்த 16ஆம் திகதி முதல் மஹியங்கனையிலிருந்து பாதயாத்திரை ஒன்றினை ஆரம்பித்த பிக்குகள் குழுவே இவ்வாறு முல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இதனை முன்னிட்டு குறித்த பகுதியில் பௌத்த கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பயண வழிகள் எங்கும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக அளம்பில் சந்தியை அண்மித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பையும் பலப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment