TamilsGuide

பேனர் வச்சா மட்டும் படத்துக்கு வந்திடவா போறாங்க -விஜய் சேதுபதி வைரல் speech

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 50-வது படம் மகாராஜா. அனுராக் காஷ்யப் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் படம் திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை குவித்து வருகிறது. மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியது, இந்த கதையை கேட்டவுடன் ஒரு பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வி ஒவ்வொரு படத்தின் போதும் இருக்கும். கதை கேட்கும் போது கொஞ்சம் யூகிக்கலாம்.

ஆனால் நடித்து முடித்த பிறகு எதையும் யோசிக்க முடியாது. எப்படியும் இந்த படம் ஓடி தயாரிப்பாளருக்கு போட்ட காசை எடுத்துக் கொடுத்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் எனது முந்தைய படங்கள் சரியாக ஓடாததால் கட் அவுட் வைப்பவர்கள் சிலர் விஜய் சேதுபதிக்கு கட் அவுட் வைப்பதால் மக்கள் படம் பார்க்க வரவா போகிறார்கள் என்று பேசியதாக என் நண்பர் கூறினார்.

அதை யெல்லாம் மனதில் வைத்து நிச்சயமாக இந்த படத்தில் நடிக்கவில்லை. அப்படி திட்டம் போட்டு நடித்தால் நிச்சயமாக அந்த படம் வெற்றி பெறாது. உண்மையான உழைப்பை கொடுத்தோம் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment

Comment