TamilsGuide

போர்தொழில் இயக்குனருடன் இணையும் தனுஷ்

கடந்த ஆண்டு அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோரின் நடிப்பில் போர் தொழில் எனும் திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

கிரைம் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் ராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. மேலும் படம் தொடர்பான அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால், விக்னேஷ் ராஜாவுடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதே சமயம் இந்த புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் தனுஷ் தற்போது `குபேரா' படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக `தேரே இஷ்க் மெய்ன்' எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளார் தனுஷ். எனவே தனுஷ் தனது முந்தைய படங்களின் கமிட்மெண்ட்களை முடித்த பின்பு போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Comment