TamilsGuide

அரகலய போராட்ட குழுவினர் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் அமைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக கொண்டு அரகலய போராட்ட குழுவினர் இணைந்து, மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக பழைய மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, முன்னணி சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த புதிய அரசியல் இயக்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
 

Leave a comment

Comment