TamilsGuide

கல்விசாரா ஊழியர்களின் சத்தியாக்கிரக போராட்டம்

கல்வி சாரா ஊழியர்கள் 49ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக தொழில் சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்று வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழக வளாகம் முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினத்திலிருந்து சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தங்களது பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்றும் அவ்வாறு தீர்க்கப்படாத பட்சத்தில் குறித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Comment