TamilsGuide

பாலின சமத்துவம் தொடர்பான சட்ட மூலத்தை அனுமதிக்க முடியாது

பாலின சமத்துவம் தொடர்பான சட்ட மூலத்தை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இணைவழி பாதுகாப்பு சட்டமூலமும் நீதிமன்ற வியாக்கியானத்தை மீறியே நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது தடவையாக நேற்றும் மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற வியாக்கியானங்களை பின்பற்ற தேவை இல்லை என ஜனாதிபதி நேற்று சபையில் குறிப்பிட்டார்.

தற்போது ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மேலும் ஒரு வருடம் நீடிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுகின்றார்.
19வது திருத்தச்சட்டத்திலுள்ள சரத்தின்படி முயற்சிக்கின்றார்.

ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களுடன் ஒத்து போகாமல் தனியாக இயங்க முற்படுகின்றார். இதற்கு நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்கி
தனது பதவி காலத்தை அதிகரிக்க முற்படுகின்றார்.

அத்துடன் கனிபல் லிசம் என்ற சொல்லை ஜனாதிபதி பயன்படுத்தியிருக்ககூடாது. அரசியலமைப்பின் தீர்மானங்களுக்கு உட்பட்டால் மாத்திரமே சட்டமூலங்களை சட்டமாக்க முடியும் ” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment