TamilsGuide

யாழில் முன்பகை காரணமாக இளைஞர் படுகொலை

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்  கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்தாகப்  பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

முன்பகை காரணமாக நேற்றைய தினம் இரவு மது போதையில் சிலருடன் வாய்த்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a comment

Comment