TamilsGuide

தேவரா ரிலீஸ் அப்டேட்

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் 'ஆச்சார்யா' படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.

'தேவரா -1' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சாயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இந்நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தாய்லாந்தில் ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம்பெறும் மெலோடி பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக வரும் ஜூன் 17-ம் தேதி படக்குழு தாய்லாந்து செல்கின்றனர். ஜூலை மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளனர். இப்படம் இரு பாகங்களாக வெளிவரவுள்ளது.

இப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர் ஆனால் தற்பொழுது இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

Leave a comment

Comment